full screen background image

ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் ‘தி வில்லேஜ்’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் ‘தி வில்லேஜ்’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான ‘தி வில்லேஜ்’, வரும் நவம்பர் 24 அன்று வெளியாகிறது.

இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில் P.S.ராதாகிருஷ்ணன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச் சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த ‘தி வில்லேஜ்’, தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும்.

தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 24 அன்று தமிழில் வெளியிடப்படுவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

இத்தொடர் பற்றி கிரியேட்டிவ் தயாரிப்பாளரும், இயக்குநருமான மிலிந்த் ராவ் பேசும்போது, “எங்கள் கடுமையான உழைப்பில் அன்பின் வெளிப்பாடான இந்த தி வில்லேஜ்-ஐ உலகளாவிய பார்வையாளர்களிடம் பிரைம் வீடியோவுடனான கூட்டாண்மையோடு கொண்டு செல்வது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஒரு நல்ல திகில் தொடர் அல்லது திரைப்படம் என்பது இரவில் தனியாக வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே உங்களை அச்சுறுத்துவதாகவும், ஒரு மரக்குச்சி உடையும் சத்தம்கூட உங்கள் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, உங்களைச் சுற்றி நிழலுருவங்கள் உயிரெழுந்து வருவது போல தோற்றமளிக்கச்செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த வகை திரைப்படங்களை அனுபவித்து ரசிப்பவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கும் வகையில் அச்சத்தை உருவாக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைந்துள்ளது. 

திகில் படங்களின் ஆர்வலர்கள் மட்டுமின்றி, அதன் தனித்துவமான கதைக் களம் மற்றும் அதற்கும் மேம்பட்ட திரைப்படக் கலையம்சத்தை விரும்பும் அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இத்தொடர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்..” என்றார்.

Our Score