full screen background image

சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் டைப்பில் உருவாகும் ‘தி ஸ்டிங்கர்’ திரைப்படம்

சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் டைப்பில் உருவாகும் ‘தி ஸ்டிங்கர்’ திரைப்படம்

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் அருண் பிரசாத்தின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தி ஸ்டிங்கர்.

P.ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரபல நடிகையொருவர் கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என படக் குழு தெரிவித்துள்ளது.

ஒளிப்பதிவு – சபரி, இசை – M.S.காமேஷ், படத் தொகுப்பு – மணிகுமரன் சங்கரா, கலை இயக்கம் –  முஜிபூர் ரஹ்மான், சண்டை இயக்கம் – வீர் விஜய், தயாரிப்பு மேற்பார்வை – K.H.ஜெகதீஸ், பத்திரிக்கை தொடர்பு – எம்.பி.ஆனந்த்.

சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த, மிகவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள இந்த திரைப்படத்தை, தமிழ் சினிமாவில் இதுவரையிலும் கண்டிராத வகையில், உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் CGI மற்றும் VFX வேலைகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையை சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு உருவாக்க பொறுப்பேற்றுள்ளது.

ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைக் களங்கள் பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும் என இயக்குநர் P. ஹரி தெரிவித்துள்ளார்.

அனிமேஷன் வேலைகள் முடிந்த நிலையில் இருக்கும் இத்திரைப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க தயாராக இருக்கிறது.

இந்த THE STINGER திரைப்படம் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உதவியுடன் உலக தரத்தில் உருவாகும் ஒரு மாறுபட்ட திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

Our Score