full screen background image

“பாக்யராஜ் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரை படத்தில் சேர்த்ததுதான்” – இயக்குநர் பேரரசு பேச்சு!

“பாக்யராஜ் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரை படத்தில் சேர்த்ததுதான்” – இயக்குநர் பேரரசு பேச்சு!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும் படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர்.

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “எம்.ஜி.ஆர். அவர்களால் ‘என் கலை வாரிசு’ என்று சொல்லப்பட்ட பாக்யராஜ் அவர்கள், ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை ‘அவசர போலீஸ்’ என்ற பெயரில் தயாரித்து முடித்து வெளியிட்டார். அந்த வகையில் எம்ஜிஆரும், பாக்யராஜ் சார் அவர்களும் சேர்ந்து நடித்த படம் அது. இப்படி ‘காக்கி சட்டை’ வேடங்களில் படங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள். இன்டர்வெல்  லாக்  என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவதுதான் லாக். 

அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப் படம். பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதைவிட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால், அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார். இடைவேளைக்குப் பின்பு அதை மிக சுவாரஸ்யமான முறையில் அவிழ்த்துவிடுவார்.

பாக்யராஜ் ஸார் எவ்வளவோ நல்ல கருத்துக்களை, நல்ல கதைகளை திரைப்படங்களில் சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரை முந்தானை முடிச்சு’ படத்தில் வைத்ததுதான். இந்த மேடையில் பலரும் அதைப் பற்றி பேசுவதைக் கேட்டபோது, இது பாக்யராஜ் ஸார் செய்த தவறோ என்று தோன்றுகிறது.

Our Score