“படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரி இருக்கார்..!” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டு..!

“படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரி இருக்கார்..!” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டு..!

“வா பகண்டையா’ படத்தின் ஹீரோவான விஜய தினேஷ், விஜயகாந்த் மாதிரி உள்ளதாக” இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டியுள்ளார்.

வா பகண்டையா’ என்ற புதிய தமிழ்த் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரி்ல் நடைபெற்றது.

விழாவில் இயக்குநரும், ‘பெப்சி’ அமைப்பின் தலைவருமான  ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ”முப்பது வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் ரிலீஸானபோது என்னால் தியேட்டருக்குள் போகவே முடியவில்லை. அன்றைக்கு அங்கே அப்படியொரு கூட்டம். அந்தளவு கூட்டத்தை இன்றைய தினம், இந்த விழாவில்தான் பார்க்கிறேன்.

எப்படி ‘புலன் விசாரணை’ திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்றதோ, அதேபோல் இந்தப் படமும் பெரி அளவுல் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ‘புலன் விசாரணை’யில எப்படி விஜய்காந்த் இருந்தாரோ… அதே விஜய்காந்த் மாதிரி இந்த படத்தோட ஹீரோவும் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கார். ஒரு தமிழ்ப் பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்திருக்காங்க. அதையெல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ இத்திரைப்படம் நல்லதொரு தமிழ்ப் படமா வந்திருக்கும்கிற நம்பிக்கை வருது.

டிரெய்லர் பார்க்கிறப்போ, படம் சமூக அக்கறையை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்ச்சுக்க முடிஞ்சுது. இனத்தால, மதத்தால நாட்டை துண்டாடுறவங்களுக்கு எதிரான வசனமும் இருக்கு. அது எல்லாமே சரியானதுதான். அந்த வகையில இயக்குநர் நல்ல படத்தைத்தான் எடுத்திருக்கார் என்று நம்புகிறேன்…” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

Our Score