‘ஆபரேஷன் ஜூஜூபி’ என்னும் திரைப்படம் தற்போது தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ஷாம்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அருண்காந்த் இயக்கியிருக்கிறார்.
தற்போது இந்தப் படம் முழுவதுமாக தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புதிய வீடியோ ஒன்றை இந்தப் பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பர வீடியோவில் நடிகர் கமல்ஹாசனை கிண்டல் செய்திருப்பதை கமல்ஹாசனின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி படுதோல்வியடைந்ததையடுத்து கமல்ஹாசன் அடுத்து ஷூட்டிங்கிற்கு கிளம்பத் தயாராகிவிட்டதாக சொல்லி.. அரசியலை பகுதி நேர வேலையாகப் பார்க்கக் கூடாது. அது ஒரு முழு நேர மக்கள் சேவை என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்தப் படக் குழு இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறது என்று குமுறுகிறார்கள் கமல்ஹாசனின் ஆதரவாளர்கள்.