தயாரிப்பாளர் ஆர்.கே.அன்புச் செல்வனின் தலைமையில் இயங்கி வரும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான தயாரிப்பாளர் காமராஜ் தயாரிப்பில், இயக்குநர் சம்பத் இயக்கி கொண்டிருக்கும் “ஜெய் சீதா” படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம், இந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த பெப்சி யூனியனின் ஆட்கள், தங்களின் உறுப்பினர்களை வைத்துதான் படப்பிடிப்பினை நடத்த வேண்டும் என்று சொல்லி தகராறு செய்துள்ளனர்..!
சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வனுக்கு இத்தகவல் தெரிந்ததும், உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.
பெப்சி யூனியனில் இருந்து வந்திருந்தவர்களிடம், “சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி யூனியனோடு எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. எந்த சங்கத்திற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை. எங்களுக்கு விருப்பமானவர்களை வைத்துத்தான் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவோம்” என கூறி அவர்களை திருப்பியனுப்பிள்ளார் ஆர்.கே.அன்புச்செல்வன்.
சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படத்தை நிறுத்துவதற்கு ‘பெப்சி யூனியன்’ உட்பட எந்த சங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.