full screen background image

“கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் என்னை வைச்சு செஞ்சுட்டார்” – தயாரிப்பாளர் ரவீந்தரின் சுவாரஸ்ய பேச்சு

“கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் என்னை வைச்சு செஞ்சுட்டார்” – தயாரிப்பாளர் ரவீந்தரின் சுவாரஸ்ய பேச்சு

படத்தின் கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் கூட்டிவிட்டாலும் படத்தில் அத்தனையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான இந்த நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், அது போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி.

நான் நல்ல படங்களை எடுத்த தயாரிப்பாளர் இல்லைதான்.. ஆனால் நல்ல தயாரிப்பாளர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. என் வாழ்க்கை ’20/20′, ‘வனிதா’ என முடிந்துவிடும் என நினைத்தேன். அந்த வீடியோக்களை பார்த்த  இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள்.

யோகி பாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி படத்தில் இருந்தது. அதில் நடிக்க நான்  நிறையவே யோசித்தேன், ஆனால், என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள். என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள்தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டைவிட அதிகமானது. ஆனால், படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததைவிட என்னை வைத்து செய்ததுதான் அதிகம். ஆனாலும், படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார்.

இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில்தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. இந்தப் படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம்…” என்றார்.

 
Our Score