வேந்தர் டிவியின் ‘தடம் பதித்தவர்கள்’ தொடரில் இந்த வாரம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்..!

வேந்தர் டிவியின் ‘தடம் பதித்தவர்கள்’ தொடரில் இந்த வாரம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்..!

வேந்தர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தடம் பதித்தவர்கள்’.

தொழில் துறையில் தடம் பதித்து சாதனை புரிந்தவர்களைப் பற்றி, அவர்கள் அந்தத் துறையில் எப்படி முன்னேறி சாதனை படைத்தார்கள் என்ற வரலாறு ஆரம்பத்தில் ஒளிபரப்பாகியது.

தற்போது, திரைத் துறையில் தடம்பதித்து, மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கும் கலைஞர்களைப் பற்றிய வரலாற்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினிக்குப் பிறகு, தற்போது சிவாஜியின் சாதனைகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சிவாஜியை அறிஞர் அண்ணா பாராட்டியது, சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மாளின் மறைவு மற்றும் நடிகர் திலகத்தின் சாதனைப் படங்களான தில்லானா மோகனாம்பாள், மகாகவி காளிதாஸ், உயர்ந்த மனிதன் ஆகியவை பற்றிய தொகுப்பு வருகிற பிப்ரவரி 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் மறுஒளிபரப்பை, வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கண்டு ரசிக்கலாம்.