இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற இயக்குநர் ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் ‘தப்பு தண்டா’.
இந்தப் படத்தில் சத்யா கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும், ஜான் விஜய் மற்றும் ‘விசாரணை’ புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்தப் படம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
“ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில் நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு, இயக்குநரின் திறமை.. இவையனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் சேரும்போது மட்டுமே.
அவ்வாறான விநியோகஸ்தர்களில் ஒருவரான ஜோன்ஸ் எங்களின் ‘தப்பு தண்டா’ படத்திற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக, மிக மகிழ்ச்சியாகும். தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ‘செஞ்சுரி இண்ட்டர்நேஷனல்ஸ்’-ன் ஜோன்ஸ் அவர்கள், எங்களது ‘தப்பு தாண்டா’வை வெளியிடுவதில் எங்களுக்கு அளவற்ற பெருமை.
இந்தப் படத்திற்கு சென்சார் குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளதும் எங்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகவுள்ள ‘தப்பு தண்டா’விற்கான விளம்பரப் பணிகளை வரும் நாட்களில் தொடங்க உள்ளோம்..” என உற்சாகமாகக் கூறினார் புதுமுக இயக்குநரான ஸ்ரீகாந்தன்.









