full screen background image

‘பண்டிகை’ படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் மாறிய நடிகை விஜயலட்சுமி..!

‘பண்டிகை’ படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் மாறிய நடிகை விஜயலட்சுமி..!

பிரபல இயக்குநர் அகத்தியனின்  மகளான விஜயலட்சுமி ‘சென்னை-600028’ மற்றும் ‘அஞ்சாதே’ போன்ற படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி, பாடலாசிரியராகவும் உருமாறியுள்ளார். 

கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் செய்யவுள்ளது. படத்திற்கு ஆர்.ஹெச்.விக்ரம் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை விஜயலட்சுமியின் கணவரான பெரோஸ் இயக்கியுள்ளார்.

Pandigai-Movie-Poster-1

இது பற்றி இயக்குநர் பெரோஸ் பேசுகையில், ”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ‘பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக  நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு  திருப்தி அளிக்காத  நிலையில், விஜயலட்சுமி ‘நான் எழுதலாமா…?’ என கேட்டார். நானும் தடுக்கவில்லை.

ஒரு சில நாட்களில் கழித்து  அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்! ‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் R.H. விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் நிறைய பொறுப்புணர்வு தந்துள்ளது. வரும் ஜூலை 7-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை’க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.

Our Score