‘தப்பாட்டம்’ கலைஞனின் வாழ்க்கைக் கதைதான் ‘தப்பாட்டம்’ திரைப்படம்

‘தப்பாட்டம்’ கலைஞனின் வாழ்க்கைக் கதைதான் ‘தப்பாட்டம்’ திரைப்படம்

நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்டவரான தயாரிப்பாளர் ஜே.கே.ரித்தீஷ், தனது தயாரிப்பு நிறுவனமான ‘சாகியா செல்லுலாய்ட்ஸ்’ மூலம் ‘தப்பாட்டம்’ என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இது இவருடைய  இரண்டாவது தயாரிப்பாகும்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகமான துரை சுதாகர் நடித்திருக்கிறார். இவர் நிலா புரோமோட்டர் நிறுவனத்தின் தலைவர். தப்பாட்ட கலைஞரான இவர், இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார். கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குநர் முஜிபூர், துளசி ரூபி ஜெயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்கம் – முஜிபூர், தயாரிப்பு - ஜே.கே.ரித்தீஷ், இசை - பழனி பாலு, படத் தொகுப்பு - R. சரண் சண்முகம், கலை - பவானி ஈஸ்வரன், சண்டை பயிற்சி - ஆக்ஷன் பிரகாஷ், நடனம் – ராதிகா, தயாரிப்பு நிர்வாகம் -  ரியாஸ்,s.சய்ரோஸ், மக்கள் தொடர்பு – நிகில்.

படத்தின் இயக்குநரான முஜிபூர், பிரபல இயக்குநர்களான மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோருடன் பணியாற்றியவர். இதற்கு மூன் ‘இரு நதிகள்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் முஜிபூர், “இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980-களின் பின்னணிகளில் நடக்கும்படியாக இடம் பெற்றுள்ளது.

தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் அந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம்.

மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையையும் ஆணித்தனமாக கூறும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.  இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும்படியாக இருக்கிறது. ரசிகர்கள் நிச்சயமாக இந்தப் படத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்...” என்கிறார் இயக்குநர் முஜிபூர் நம்பிக்கையோடு.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோயில் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் வேளையில், படக் குழுவினர் இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியீட மும்முரமாக செயல்பபட்டு வருகின்றனர்.