full screen background image

தப்பாட்டம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘தப்பாட்டம்’. 

தப்பாட்டம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘தப்பாட்டம்’. 

தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா.

படம் குறித்து பேசிய இயக்குநர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக் கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம். விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரவிருக்கிறது…” என்றார்.

முன்னதாக இப்படத்தின் மூலம் தியேட்டர்களிலிருந்து கிடைக்கும் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க இருப்பதாக படக் குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Our Score