தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்

தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்

Sri Devi Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சந்தோஷ் கிருஷ்ணன் புதிய படமொன்றைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘தொடுப்பி’ மற்றும் ‘கருப்பு கண்ணாடி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் அருள்நிதியின் ‘டைரி’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி மற்றும்  மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

பல தமிழ் படங்களுக்கு பைனான்ஸ் உதவிகளைச் செய்து வரும் பிரபல பைனான்ஸியரான சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

‘ரன்’, ‘எழுமின்’ போன்ற படங்களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘உறியடி’ படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார்.

‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தின் இசையமைப்பாளரும்  சமீபத்தில் வெளியான  ‘Rajini anthem’ பாடலுக்கு இசையமைத்த D.M.உதயகுமார் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

‘எழுமின்’, ‘My Dear Lisa’, ‘அலேகா’ படத்தில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தை படத் தொகுப்பு செய்கிறார்.

‘பாகுபலி’, ‘கபாலி’, ‘கத்தி’, ‘விவேகம்’ போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் செய்து தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினால் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும்படியாகவும் இந்த படம் உருவாகிறது.

இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரியின் சேர்மன் மக்கள் G.இராஜன் தலைமையில் அரசாங்க விதிமுறைப் படி எளிதாக நடைபெற்றது.

சினிமா படப்பிடிப்புகளை துவங்குவது குறித்து தமிழக அரசின் வழி காட்டும் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் படத்தின் படபிடிப்பு நடைபெறும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படுமாம்.