full screen background image

தங்கமே.. வைரமே… – முன்னோட்டம்

தங்கமே.. வைரமே… – முன்னோட்டம்

வெள்ளித்திரையில் இதுவரையில் பார்த்த முகங்களே இல்லாமல் முற்றிலும் அந்நியப்பட்ட கிராமத்து ஜனங்களையே நடிகர், நடிகைகளாக்கி ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்திருக்கிறார்கள். பெயர் தங்கமே வைரமே..!

சந்தனம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சந்திரகுமார் தயாரித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க சின்ன பட்ஜெட் படம்தான்.. சின்ன கிராமத்திலேயே முழுக்க முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள்தான்.. தமிழ்மணி என்னும் ஹீரோவும், நட்சத்திரா என்ற ஹீரோயினும் அறிமுகமாகியிருக்கிறார்கள். கூடவே வாஹினி நாயர் என்ற இன்னொரு ஹீரோயினும் உண்டு. படத்தில் மிச்ச, சொச்சமெல்லாம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நெருங்கிய உறவுகள்தானாம்..!

ஜி.ஆனந்த் முரளி ஒளிப்பதிவு செய்ய.. ஆர்.டி.மோகன்சிங் இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் என்.முத்து. கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாடல்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் சூரியகுமரன்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் இருவரும் பெற்றுக் கொண்டார்கள்..

படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஒரு பொண்ணை லவ் பண்றார். ஆனால் பிறந்தவுடனேயே சம்பந்தம் பேசியிருக்கிறதால அத்தை மகளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வைக்குறாங்க. இப்போ மனைவியுடன் வாழவும் முடியாமல்.. காதலியை மறக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு ஹீரோவின் போராட்டமான கதையாம்..

டிரெயிலர் பக்காவான குடும்ப சப்ஜெக்ட் என்பதையும், கிராமத்து யதார்த்தத்தை சுட்டிக் காட்டுவது போலவும் இருந்தது.. இவ்வளவுக்குத்தான் இவர்களால் கொடுக்க முடியும்.. திரையிட்டுக் காட்டிய 3 பாடல்களுமே சொக்கத் தங்கம்.. அருமையான இசை.. அழகான பாடல்கள்.. சிறப்பான நடனம்.. சின்ன பட்ஜெட் படங்கள் பலவற்றில் பாடல்களும், நடனங்களும் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் இதனை பரப்புரை செய்யத்தான் ஆட்கள் இருக்காது..

இந்தப் படம், எப்படியாவது தியேட்டருக்கு வந்து ரசிகர்களை சந்திக்க வேண்டும்..!

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சூரியகுமரன்

ஒளிப்பதிவு : ஜி.ஆனந்த்முரளி

இசை : ஆர்.டி.மோகன்சிங்

எடிட்டிங் : என்.முத்து

நடனம் : ஜெ.கென்னடி

பாடல்கள் : சூரியகுமரன், நீன்பார்

கலை : ஏ.ஆர்.மாரியப்பன்

டிசைன்ஸ் : வெங்கட் ஆர்.கே.

நடித்தவர்கள்

தமிழ்மணி, தண்டபாணி, நட்சத்திரா, வாஹினி நாயர்,  

Our Score