ROAD SHOW எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எடின் தயாரித்துள்ள படம் ‘தண்டனை தூரமில்லை’.
இத்திரைப்படத்தில் எடின் கதாநாயகனாகவும், பிரகதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நிர்மல், தாமரை செல்வன், சுபாஷ், மணிகண்டன், பிரியங்கா, ஷர்மிளா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நரேஷ், இசை – யஷ்வந்த், எடிட்டிங் – இயக்கம் – சதாம் உசேன்.
படம் பற்றி இயக்குநர் சதாம் உசேன் கூறுகையில், “பொருளாதார பிரச்சனைகள் உள்ள ஐந்து நபர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க மலேசியாவிற்கு வேலை தேடி செல்கின்றனர். அங்கே அவர்கள் ஒரு மர்ம கும்பலிடம் மாட்டிக் கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இத்தகைய சூழலிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருக்கிறோம்..” என்றார்.










