full screen background image

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” திரைப்படம் செப்டம்பர் 19ல் வெளியாகிறது!

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” திரைப்படம் செப்டம்பர் 19ல் வெளியாகிறது!

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும், லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தண்டகாரண்யம்.

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘லப்பர் பந்து’ வெற்றிக்குப் பிறகு நடிகர் தினேஷூக்கு இந்தப் படம் மிக முக்கியமான வெற்றிப் படமாக இருக்கும் என்கிறார்கள். அதேபோல் நடிகர் கலையரசனுக்கும் ‘வாழை’ படத்திற்குப் பிறகு மிக முக்கியமான வெற்றிப் படமாக தண்டகாரண்யம் இருக்கும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவு பெற்று வரும் செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதன் அறிவிப்பை இன்று படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Our Score