full screen background image

தமிழ்ப் படம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது..!

தமிழ்ப் படம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது..!

2010-ம் வருடம் வெளியாகி தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ்ப் படம்’.

அதுவரையிலான அனைத்து தமிழ்த் திரைப்படங்களையும் கேலி, கிண்டலாக்கும்வகையில் திரைக்கதை அமைத்து, முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியிருந்த இத்திரைப்படம் வசூலை வாரிக் குவித்த்து.

இப்போது ஏழு வருடங்கள் கழித்து அதே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள்.

முதல் பாகத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான Y Not Studios ஷசிகாந்தே, இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

மேலும், சதிஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, கஸ்தூரி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், O.A.K. சுந்தர், அஜய் ரத்னம், ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு – ஷசிகாந்த், கதை, திரைக்கதை, இயக்கம் – C.S.அமுதன், வசனம் – K.சந்துரு, ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – கண்ணன், படத் தொகுப்பு – K.சுரேஷ், கலை – செந்தில் ராகவன், பாடல்கள் – கார்க்கி, C.S.அமுதன், தியாரு, K.சந்துரு, சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், நடனம் – கல்யாண், உடை வடிவமைப்பு – ஸ்ருதி கண்ணத், ஸ்டில்ஸ் – C.H.பாலு, தயாரிப்பு மேற்பார்வை – ரங்கராஜ், தயாரிப்பு நிர்வாகம் – ரகு SPR, நிர்வாக தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமசந்திரா, மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பங்கு கொள்ளும் அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

Our Score