செல்போனை பயன்படுத்துபவர்கள் அனைவருமே இந்த ஒரு வார்த்தையை நிச்சயமாக கேட்டிருப்பார்கள்.. கேட்ச்சிங்கான ஒரு தலைப்பு வேண்டுமென்பதற்காக நச் என்ற இந்தத் தலைப்பை சூட்டியிருக்கிறார் இயக்குநர், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. வி.எல்.எஸ்.ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் படம் இது.
படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா(புது முகம்), எதிர் நீச்சல் சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். வனராஜ் கலை இயக்கம் செய்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்து, பல விளம்பரப் படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
“ஒரு நாள், பூமியை நோக்கி வரும் காந்தப் புயலால் தகவல் தொழில் நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தினால் படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். இவர்களனைவரும் எப்படி அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பதுதான் கதை. கூடவே, தாய்க்கும் மகனுக்குமான உறவை ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளனராம்.
காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் என ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளது. ஆனாலும் மற்றைய கமர்சியல் படங்களைப் போலல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாக இப்படம் இருக்கும்வகையில்தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பல பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் சமமான கேரக்டர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தில் நகுல் நடித்திருக்கும் ஆக்சன் காட்சிகள் வெகுவாகப் பேசப்படும்…” என்கிறார் இயக்குநர்.
ஜூன் மாதம் படத்தின் இசை வெளியீடும், ஜூலை மாதம் திரையில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
Cast – Attakathi Dinesh, Nakul, Bindu Madhavi, Aishwarya, ‘Ethir Neechal’ Sathish
Direction – Ram Prakash
Production – V Chandran
Music Director – Thaman
Cinematographer – Deepak Kumar
Art Director – Vanaraj
PRO – Nikkil