full screen background image

சப்ஜெக்ட் நல்லாயிருந்தா சிவகார்த்திகேயனோட நடிப்பேன் – சந்தானம் அறிவிப்பு..!

சப்ஜெக்ட் நல்லாயிருந்தா சிவகார்த்திகேயனோட நடிப்பேன் – சந்தானம் அறிவிப்பு..!

ஓடாத படத்திற்கும், ஓட வைக்கப்பட்ட படங்களுக்குமே சக்ஸஸ் பிரஸ் மீட் நடக்கும்போது, நிசமாகவே ரசிகர்களால் ஓட வைக்கப்படும் படத்திற்கு விழா எடுக்காமல் இருந்தால் எப்படி..?

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் முதல் வாரம் 245 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அதற்கடுத்த வாரமே கூடுதலாக 100 தியேட்டர்கள் கிடைத்துவிட இப்போது 345 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..

புதுமையான கதை.. அழுத்தமான இயக்கம்.. சந்தானத்தின் எல்லை மீறாத நடிப்பு.. இதெல்லாம் சேர்ந்து படத்தை பார்க்கலாம் என்கிற ஐடியாவுக்கு தமிழ் ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இந்த வெற்றியைக் கொண்டாட நேற்றைக்கு மாலை பிரசாத் கலர் லேப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் படக் குழுவினர். படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் சந்தானம் ஆகியோரடங்கிய குழு மேடையேறியது.

சொல்லிவைத்தாற்போல் மற்ற மூவரும் 1 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு இறங்க… சந்தானம் மட்டும் பெரிய மனசு பண்ணி 3 நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து கேள்விகள் பறக்க.. டென்ஷனே ஆகாமல் சிரித்துக் கொண்டே கொஞ்சம் மழுப்பலுடன் பேசியே சமாளித்தார் சந்தானம்.

தான் காமெடி கேரக்டர்களிலும், ஹீரோ ரோல்களிலும் தொடர்ந்து நடிக்கப் போவதாகச் சொன்னார் சந்தானம்.

சந்தானத்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது முருகானந்தம் என்ற இயக்குநர். இவர் விஜய் டிவியில் முன்பு சீரியல்களை இயக்கியவராம்..

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் கதை டிஸ்கஷன் இப்போது தீவிரமாக நடந்து வருகிறதாம்.. “ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் துவங்கிவிடும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஹீரோயினே இதிலும் எனக்கு ஜாோடியாக நடிப்பார்..” என்றார்.

“ஹீரோயின் ஆஷ்னா ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார் என்பதைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.. அந்த ஐஸ்வர்யாகூட ஜோடி போட முடியலை. இவங்ககூடவே ஜோடி போட்டேன்ற சந்தோஷமாவது கிடைக்குதே.. என்றார்.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருந்தாலும், கமல் ஸாருடன் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கு என்றார்.

லிங்காவில் நடிக்கப் போவதையும் உறுதி செய்தார் சந்தானம்.

“சிம்புவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தப் படத்தோட சக்ஸஸ் பார்ட்டிலகூட சிம்பு வந்து கலந்துக்கிட்டாரு. போன்ல டெய்லி பேசிக்கிட்டுத்தான் இருக்கோம்…” என்றார்.

சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் ஏதோ மோதல் மாதிரி தெரியுதே என்று கேள்வி எழுப்பப்பட.. “சப்ஜெக்ட் நல்லாயிருந்தா சிவகார்த்திகேயனோட சேர்ந்து நடிக்கலாம்.. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரோட சண்டையெல்லாம் இல்லை. யாரும், யாரோட இடத்தையும் பில் பண்ண முடியாது.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாதையை கடவுள் பிரிச்சுக் கொடுத்திருக்காரு..

கமல் ஸார் ஒண்ணு சொன்னாராம்..  என்கிட்ட இல்லை. சும்மா ஜெனரலா.. சினிமாங்கறது ஒரு காடு மாதிரி. அந்தக் காட்டுல பல டைப் அனிமல்ஸும் இருக்கும். எல்லாம் அது அதுக வேலையைச் செஞ்சுக்கிட்டிருக்கும். அதுபோல்தான் நானும். சினிமால என் வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கேன்.. மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…” என்றார்.

இனி அடுத்து சிவகார்த்திகேயன்கிட்ட கேட்க வேண்டியதுதான்..!

Our Score