full screen background image

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ படம்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ படம்

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்னும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘தடை உடை’.

இந்தப் படத்தின் நாயகனாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் நடிகர் சிம்ஹா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும்  நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ்.ராகேஷ் இயக்கியிருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Our Score