full screen background image

மும்பை தாராவி பகுதியிலேயே படமாக்கப்பட்ட ‘தாராவி’ திரைப்படம்

மும்பை தாராவி பகுதியிலேயே படமாக்கப்பட்ட ‘தாராவி’ திரைப்படம்

‘வசந்த கால பறவை’, ‘சூரியன்’, ‘திருமூர்த்தி’, ‘கல்லூரி வாசல்’, ‘ஐ லவ் இந்தியா’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பவித்ரன்.

விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே, சிறிது இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தாராவி”.

ஏ.ஆர்.எஸ். இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மும்பை நல்லரசன், பாலசுப்ரமணியன்  இருவரும் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். சதிஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சினா, லியோ ஆகியோருடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா ஆகியோரும் நடிக்க கதாநாயகியாக சுனுலட்சுமி நடித்திருக்கிறார்.

Thaaraavi-stills-2

மணிகண்டன் ஒளிப்பதிவையும், வி.டி.விஜயன் படத் தொகுப்பையும், மும்பை மாஸ்டரான அப்பாஸ் சண்டை பயிற்சியையும், பாரதி அகர்வால் நடன் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். பல விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ள பவித்ரனின் மகனான அபய் பவித்ரன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புளியந்தோப்பு பழனி, பவித்ரன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பவித்ரன்.

மும்பையில்  தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘தாராவி’. இவர்களில் ஒருவனை அழகுப் பதுமையான கல்லூரி மாணவி காதலிக்கிறாள். அவளுடைய பெற்றோர் வசதி மிக்கவர்கள். ஆனால் இவர்களில் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மணம் முடித்தார்களா…? இல்லையா…? என்பதுதான் படத்தின் கதைக் களம்.

மும்பையில் தாராவி, தமிழ்நாட்டில் சாலக்குடி ஆகிய இடங்களில் ‘தாராவி’ படம் வளர்ந்துள்ளது.

Our Score