ஆறு படையப்பா ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பூங்கோதை தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘தாம்பூலம்’.
இந்தப் படத்தில் நாயகனாக சச்சின் புரோகித், நாயகிகளாக ஹீமா பிந்து, ரஷ்மி, வர்ணிகா என்று மூன்று பேர் அறிமுகமாகிறார்கள்.
நாயகன் சச்சின் புரோகித் ‘ஸ்டுடன்ஸ்’, ‘கடிகாரம்’ உள்ளிட்ட சில கன்னடப் படங்களில் நாயகனாக நடித்து பாராட்டுப் பெற்றவர்.
நாயகிகளில் ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர். ரஷ்மி மாடலிங்கில் புகழ் பெற்றவர். வர்ணிகா முறையாக நடனம் கற்றவர்.
இவர்களுடன் ஸ்ரீனிவாசன், காந்தராஜ், மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கணேஷ் ராஜா, இசை – கனடா தமிழர் கபிலேஷ்வர், படத் தொகுப்பு -இளங்கோ, நடன இயக்கம் – நசீர் பாபு. கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தினை இயக்குகிறார் பாரதிராமன்.
தமிழ்த் திரையுலகத்தில் குடும்பப் பாங்கான படங்கள் அத்திப்பூத்தாற்போல எப்போதாவதுதான் வருகின்றன. அந்த வரிசையில் இந்தத் ‘தாம்பூலம்’ திரைப்படமும் குடும்பப் பாங்கான பட வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
நான்கு இளைஞர்கள் குறிக்கோள் எதுவுமின்றி வாலிப வயதுக்கேற்றவாறு ஊர் சுற்றி வருகின்றனர். இவர்களின் சேட்டையால் ஒரு இளம் பெண் பாதிக்கப்படுகிறாள். இது அந்த இளைஞர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன் விளைவு என்ன என்பதன் பின்னணியில் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தினை சொல்லும் படமாக இந்தத் ‘தாம்பூலம்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
தமிழகம்-ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பரதராமி வாரச் சந்தை. இங்கு வாரந்தோறும் ஆடு, மாடு, கோழிகள், விற்பனை செய்யும் சந்தை கூடுகிறது. கூடவே, காய், கனிகள், கீரைகள், தானியங்கள் விற்பனை சந்தையும் நடைபெறுகிறது.
இந்த வாரச் சந்தையின்போது பரதராமி சுற்றுப்புற கிராம, நகர மக்கள் சந்தைக்கு தந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த சந்தையைப் பற்றி கேள்விப்பட்டு இந்த சந்தையின் பின்னணியில் ‘தாம்பூலம்’ படக் காட்சியை படமாக்கிட திட்டமிட்டனர். சந்தை கூடும் இடத்திற்கு படப்பிடிப்புக் குழுவினர் வந்தபோது பொதுமக்கள் அவர்களை வரவேற்றதுடன் சிறப்பாக ஒத்துழைப்பும் வழங்க.. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேலும், வேலூர், ஏலகிரி, ஊட்டி, பெங்களூர் போன்ற இடங்களிலும் இந்தத் ‘தாம்பூலம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.