பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த ‘பெண் அடிமை இல்லை’ படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு ‘தலைப்பு செய்தி’ என்று பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படமான இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் லிங்கா படத்தில் வில்லனாக நடித்தவர். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். மற்றும் சத்யபிரகாஷ், காந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – யாஷோ கிருஷ்ணா
பாடல்கள் – ஜி
ஒளிப்பதிவு – லஷ்மி நரசிம்மன்
நடனம் – சிவசங்கர்
ஸ்டன்ட் – ராக்பிரபு
எடிட்டிங் – ஹரி
கலை – ராஜீவ்நாயர்
எழுத்து, இயக்கம் – பிரேம்ராஜ்
தயாரிப்பு – V.ரமணா, கான்பர்தீன் கான்.
நம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென் டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும்.
அதை கைப்பற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் தலைப்பு செய்தி. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.









