full screen background image

ரசிகர்கள் முன்னிலையில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தின் டீஸர்

ரசிகர்கள் முன்னிலையில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தின் டீஸர்

கலைத் துறையில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான V கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள், வித்தியாசமான கதைக் களத்திற்கு பெயர் போன இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம்தான் ‘நானே வருவேன்’.

இந்தப் படத்தில் தனுஷூடன் இந்துஜா, எல்லி அவரம், ‘இளைய திலகம்’ பிரபு, யோகி பாபு, ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன் சில்வென்ஸ்டன், துளசி, சரவண  சுப்பையா, ஷெல்லி N.குமார், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் K செல்வராகவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் : K செல்வராகவன், தயாரிப்பு : கலைப்புலி S.தாணு, இசை : யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு : புவன் சீனிவாசன், தயாரிப்பு வடிவமைப்பு : R.K.விஜய முருகன், நடனப் பயிற்சி இயக்கம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சண்டை பயிற்சி இயக்கம் : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா, தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன், ஆடை வடிவமைப்பு:  காவியா ஸ்ரீ ராம், DI : நாக் ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர், பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி,  செல்வராகவன், தனுஷ், புகைப்படங்கள் : தேனி முருகன், பத்திரிகை தொடர்பு : ரியாஸ் K அஹமத், டைமண்ட் பாபு.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் ‘வீரா சூரா’ பாடல் 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வகும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர், நேற்று மாலை 5 மணிக்கு  வெளியாகியது.

சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்டாட்டத்துடன் மிகப் பிரம்மாண்டமாக ரோகிணி திரையரங்க  வளாகத்தில் LED திரையில் இந்த டீசர் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 
Our Score