full screen background image

“டாப்ஸி ஒரு பி கிரேடு நடிகை..” – போட்டுத் தாக்கும் கங்கனா ரணாவத்..!

“டாப்ஸி ஒரு பி கிரேடு நடிகை..” – போட்டுத் தாக்கும் கங்கனா ரணாவத்..!

தெருக் குழாயடியில் பெண்கள் தண்ணீர் பிடிக்கவரும்போது போடும் சண்டையைவிடவும் மோசமாக இருக்கிறது பாலிவுட் நடிகைகளின் மோதல்.

இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான நடிகையென்றால் அது கங்கனா ரணாவத்துதான். சாதாரணமான கருத்து வேறுபாட்டைக்கூட சண்டையாக்கிவிடுவார். அவரும், அவரது சகோதரியும்தான் இன்றைக்கு பாலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களுக்கு மிகப் பெரிய எதிரிகள்.

அக்கா ஒன்று சொல்வதும், தங்கை அதற்கு ஒத்து ஊதுவதும், தங்கை குற்றம்சாட்டினால் அக்கா அதை எடு்த்துக் கொடுப்பதுமாக சில வருடங்களாக இந்த சகோதரிகளால் பாலிவுட் சகல பக்கங்களிலும் அடி வாங்கியுள்ளது.

இப்போது இவர்களின் குறி நடிகை டாப்ஸி. டாப்ஸிக்கும் இந்த சகோதரிகளுக்கும் இடையில் நல்லுறவே கிடையாது. “கங்கனாவின் நடிப்பு ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேச்சு.. இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து செய்கிறார் டாப்ஸி” என்று கங்கனாவின் சகோதரி ஒரு முறை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். அப்போது டாப்ஸிக்கு இந்த இரண்டு சகோதரிகளும் சேர்ந்து ‘சீப்பான காப்பி’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தார்கள்.

அன்றில் இருந்து இன்றுவரையிலும் இரு தரப்பினருக்கும் இடையில் மல்லுக்கட்டுதான். சொற்போர்தான். கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்தது. தற்போது மீண்டும் முதலில் இருந்து துவங்கியுள்ளது.

டாப்ஸியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹஸீல் தில் ரூபா’ என்ற திரைப்படம் நாளை நெட் பிளிக்ஸில் வெளியாகிறது. இதையொட்டி டிவீட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் நடிகை டாப்ஸி.

அப்போது ஒரு ரசிகர், “கங்கனா டிவீட்டரில் இல்லையே..? நீங்க அவரை மிகவும் மிஸ் செய்கிறீர்களா..?” என்று கேட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்த டாப்ஸி, “எனது வாழ்க்கையில் கங்கானாவுக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் இதுவரையிலும் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அவர் என்னை தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தையே மிகவும் காயப்படுத்திவிட்டார். அவர் என்னுடைய சக நடிகை. நான் வேலை செய்யும் துறையில் இருக்கும் இன்னொரு நபர். அவரைப் பற்றி நல்லதோ, கெட்டதோ எதுவும் என்னிடத்தில் இல்லை.. அவ்வளவுதான்.” என்று சொல்லியிருக்கிறார். 

இதைப் படித்துவிட்டு கங்கனா இன்ஸ்டாகிராமில் டாப்ஸிக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

“டாப்ஸி ஒரு பி கிரேடு நடிகை.! அவரைப் போன்றவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய பெயரைப் பயன்படுத்தி, என்னுடைய ஸ்டைலில் நடிப்பது, சான்ஸ் கேட்பது, தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வது என்று செய்து வருகிறார்கள். இவர்களுக்கு நான் ஒருபோதும் மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் நான் வைஜெயந்திமாலா, வஹீதா ரஹ்மான், ஸ்ரீதேவி ஆகியோர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்து அவர்களை பின்பற்றுபவள்.. இந்த ‘சீப்பான காப்பி’யை கண்டு கொள்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. அவர் எனது பெயரால்தான் விளம்பரம் பெற்று வாழ்ந்து வருகிறார்.. அவரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை..” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அழகு தேவதைகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டால் நாம் யார் பக்கம் பேசுவது..?

 
Our Score