full screen background image

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ பெரும் வெற்றி..!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ பெரும் வெற்றி..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், தற்போதைய தலைவரான முரளி ராமசாமி தலைமையில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்  தேர்தல்  2023-2026  ஆண்டுகள்வரை பதவிகளுக்கான  தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி  கல்லூரி வளாகத்தில் நீதியரசர்கள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர்.

இவர்களின் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,111 வாக்குகள் பதிவானது.          
           
இத்தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜி.கே.எம்.தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் 617 வாக்குகளும், ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 535 வாக்குகளும், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் பாண்டியன் 511 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

26 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :

தேவயானி – 642
சுபாஷ் சந்திரபோஸ் – 598
சித்ரா லட்சுமணன் – 580
அழகன் தமிழ் மணி – 573
மனோஜ்குமார் – 564
அன்பு – 545
மாதேஷ் – 531
சக்தி சிதம்பரம் – 517
திருமலை – 515
ஹெச்.முரளி – 496
எம்.கபார் – 496
அம்பேத்குமார் – 492
விஜயமுரளி – 491
பி.டி.செல்வகுமார் – 488
டில்லிபாபு – 481
ஏ.எல்.தயா – 481
ஜோதி – 475
சுரேஷ் – 473
பழனிவேல் – 469
ப்ரவீண்காந்த் – 464
பைஜாடாம் – 447
செந்தில்குமார் – 431
கமலகண்ணன் – 421
ராமச்சந்திரன் – 399
செந்தாமரை கண்ணன் – 392
நீல்கிரீஷ் முருகன் – 392

ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட லைக்கா நிறுவன தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்குமரன் அவர்கள் 651 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த போட்டியாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இதுவாகும்.

நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட   ‘தேனாண்டாள்’ முரளி  ராமசாமி அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பைவ் ஸ்டார் கதிரேசன் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவர்  இரண்டு முறை துணைத் தலைவராகவும், இரண்டு முறை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற நலம் காக்கும் அணியினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Our Score