தேசிய திரைப்பட விருதுகள் தமிழகத்திற்கு ஏழு விருதுகள்..!

தேசிய திரைப்பட விருதுகள் தமிழகத்திற்கு ஏழு விருதுகள்..!

இன்று மாலை டெல்லியில் அறிவிக்கப்பட்ட 62-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.

IMG_8959

பள்ளிக் கல்வித் துறையின் சீர்த்திருத்தம், ஆசிரியர் – மாணவர்கள் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய ‘குற்றம் கடிதல்’ என்னும் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான ‘காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘ஜிகர்தண்டா’வில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

‘ஜிகர்தண்டா’ படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் ‘சைவம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகே அழகு’ பாடலுக்காக இந்த விருதினைப் பெறுகிறார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள ‘குற்றம் கடிதல்’ மற்றும் ‘காக்கா முட்டை’ ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. எனினும், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score