full screen background image

தங்கர் பச்சானின் மகன் நாயகனாக நடிக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’

தங்கர் பச்சானின் மகன் நாயகனாக நடிக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’

கிராமத்துப் பின்னணியையும், கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தத்தையும் தனது திரைப்படங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் தங்கர் பச்சான், தற்போது சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு நகைச்சுவைப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ (Takku Mukku Tikku  Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனது முந்தைய திரைப்படங்களில் பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் காண்பித்த இயக்குநர் தங்கர் பச்சான், இந்தப் படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தனது மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

இந்தப் படத்தில் விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான், இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – சக்தி செல்வராஜ், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு நிறுவனம் – பி.எஸ்.என். என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இப்படத்தின் முதல் பார்வை  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score