சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கபாலி’ என்பது முடிவாகிவிட்டது..!
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்களின் இயக்குநரான ரஞ்சித் இப்படத்தை இயக்கவிருப்பது தெரிந்ததே..
இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் படத்தில் மேலும் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்கலாம் என்று தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கான தலைப்பாக இதுவரையிலும் ‘காளி’, ‘கண்ணபிரான்’ என்று பல பெயர்கள் பேசப்பட்டு வந்தாலும் கபாலி என்ற பெயர் அழுத்தமாக பரப்பப்பட்டது. இப்போது இந்த ‘கபாலி’தான் தலைப்பு என்பது மிகவும் உறுதியான தகவலாக வெளிவந்துள்ளது.
வரும் 21-ம் தேதி இந்தப் படத்திற்கான போட்டோ ஷூட் நடைபெறப் போகிறது. அடுத்த மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
அடுத்து வருவது ரஜினியின் ‘கபாலி’..
இது எப்படி இருக்கு..?!