full screen background image

“குடும்பத்திற்காகவே பாலியல் தொழிலில் இறங்கினேன்” – ஸ்வேதா பாசு வாக்குமூலம்..!

“குடும்பத்திற்காகவே பாலியல் தொழிலில் இறங்கினேன்” – ஸ்வேதா பாசு வாக்குமூலம்..!

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத்தில் பார்க் ஹயாத் நட்சத்திர ஹோட்டிலில் நடந்த விபச்சார ரெய்டில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு, தனது குடும்பத்தின் நலனுக்காகவே இத்தொழிலில் இறங்கியதாக கோர்ட்டில் கூறினாராம்..! தெலுங்கு திரையுலகமே இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உள்ளது.

இதில் கூடுதல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்ற ஒரு செய்தி, இந்த ஸ்வேதா பாசு சிறுமியாக இருக்கும்போது 2002-ம் ஆண்டு makdee என்ற இந்திப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினைப் பெற்றவராம்..!

2005-ம் ஆண்டு இக்பால் என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். 2006-ம் ஆண்டு ராம்கோபால்வர்மாவின் Darna Zaroori Hai என்ற படத்தில் ஒரு கேரக்டர் செய்திருக்கிறார். 2008-ம் ஆண்டுதான் தெலுங்கு படவுலகில் நுழைந்திருக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜுவின்  Kotha Bangaru Lokam என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். இது சூப்பர் ஹிட்டானாலும் அடுத்தடுத்து வந்த படங்களெல்லாம் பி கிரேட் படங்களாகவே இருக்க.. ஸ்வேதாவின் பாதையும் மாறியிருக்கிறது.

தமிழில் ‘ரா ரா’ என்ற படத்திலும், சந்தமாமா படத்திலும் நடித்தார். ‘சந்தமாமா’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார். கேட்டதற்கு சம்பளப் பிரச்சினை என்றார்.  சந்தமாமாவில் இவரது நடிப்பும் பேசப்பட்டது.

“தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடிகைகளின் நடிப்புத் திறமையை பார்த்து வாய்ப்புகள் தரவில்லை. இங்கே எனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைத்திருந்தால் இப்படி பாதை மாறியிருக்க மாட்டேன்.. எனது குடும்பத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்காக நான் இப்படி மாற வேண்டியதாகிவிட்டது..” என்று நீதிபதியிடம் கூறியிருக்கிறார் ஸ்வேதா பாசு.

இப்போது மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் ஸ்வேதா பாசு. இந்தச் செய்தியோடு அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது என்பது சோகமான விஷயம்தான்..

அதே சமயம்.. பணம் வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்திக் கொண்டது தவறு என்பதை அவர் உணர வேண்டும்..!

ஒரு சிறந்த நடிகையாக பெயர் எடுத்திருக்க வேண்டியவரின் வாழ்க்கை ஒரு சில மணி நேரத்திற்குள் அஸ்தமனமாகிவிட்டது..!

Our Score