full screen background image

“இயக்குநர் பத்ரி கதை சொல்லுவாரு. ஆனா சுத்தமா புரியாது” – நடிகர் நரேனின் கிண்டல்..!

“இயக்குநர் பத்ரி கதை சொல்லுவாரு. ஆனா சுத்தமா புரியாது” – நடிகர் நரேனின் கிண்டல்..!

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரணை செய்த முத்கல் கமிட்டி தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டது. இனி கோர்ட்டுதான் அதன் விவரங்களை வெளியில் தெரிவிக்க வேண்டும்.

இதற்கு முன் நடந்த கிரிக்கெட் ஊழல்கள் பற்றியெல்லாம் ஒரு கமிஷன் அமைத்து விசாரணை செய்தார்கள். அந்த அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்று.. அதனை மையமாக வைத்துத்தான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தை எடுத்திருக்கிறார்களாம்..

இந்த மேட்ச் பிக்ஸிங் எப்படியெல்லாம் நடந்திருக்கும், யார், யாரெல்லாம் இதில் எப்படியெலலாம் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஒரு கருவாக்கி.. அதனை விரிவான காமெடி கலந்த திரைக்கதையில் ஒரு படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பத்ரி.

இந்தப் படத்திற்கு கிரிக்கெட் விளையாட்டை பற்றி நன்கு தெரிந்த ஒருவர் வசனம் எழுதினால் நன்றாக இருக்குமே என்றெண்ணி பள்ளி, கல்லூரி காலங்களில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்த நடிகர் சிவாவிடம் அதனை ஒப்படைத்திருக்கிறார்கள். அதன் பலன் இந்தப் படத்தின் டிரெயிலரிலேயே பளிச்சென்று தெரிகிறது.. நன்று..!

படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் நரேன், இயக்குநர் பத்ரியின் நீண்ட நாள் நண்பர். அதனால் உரிமையுடன் பத்ரியை ‘அவன் இவன்’ என்று அழைத்தே பேசினார். பத்ரியும் அப்படியே..!

நரேன் பேசும்போது, “திடீர்ன்னு ஒரு நாள் பத்ரி வந்து இந்தப் படத்துல நீ நடிக்கணும்னான்.. சரிண்ணே.. கதை சொன்னான்.. இவன் எப்பவுமே ரொம்ப பாஸ்ட்டா கதை சொல்லுவான்.. ஆனா நமக்கு புரியவே புரியாது.. இந்தப் படத்துலேயேும் அதே மாதிரிதான்.. சுத்தமா புரியலை.. கடைசீல ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்தான் கதை என்னன்னு தெரிஞ்சுக்கி்ட்டேன்..” என்றார்.

பத்ரி தான் பேசும்போது இதற்கு பதில் சொன்னார். “புரியற மாதிரி கதையைச் சொல்லிட்டா நீ கதைல திருத்தம் சொல்லுவீல்ல.. அது சரியில்லை.. இது சரியில்ல.. அது தப்பு.. இது தப்பு.. அதை மாத்து.. இதை மாத்துன்னு ஐடியா கொடுப்ப.. அதுனாலதான் நான் வேகமாக கதையைச் சொல்றேன்.. உனக்குப் புரியலைன்னா எனக்கு சந்தோஷம்தான்..” என்றார் சிரித்தபடியே..

இந்தப் படத்தின் டிரெயிலரில் ஒரு சிறிய காட்சி வருகிறது. படத்தின் ஹீரோவான கருணா நீளமா மூக்கு வைச்சிருக்கிறவன் கண்டிப்பா முட்டாளாகத்தான் வருவான்..” என்பார். அடு்தத ஷாட்டில் நரேன் தோன்றுவார்.. “இது திட்டமிட்டதா..? இல்ல.. கிண்டலா சொன்னதா..? என்று நிருபர்கள் இயக்குநரிடம் கேட்க.. நீள மூக்குக்கே உண்டான ஒரு வரலாற்றை சொன்னார் இயக்குநர் பத்ரி.

“சாமூத்ரிகா லட்சணத்துல இந்த இந்த உறுப்புகள் இப்படி இப்படியிருந்தால் அவர்களோட குண நலன்கள் இப்படியிருக்கும்னு எழுதியிருக்காங்க.. அதுல பார்த்தீங்கன்னா ‘நீளமா மூக்கு இருக்குறவங்க கண்டிப்பா முட்டாளாத்தான் இருப்பாங்க’ன்னு இருந்துச்சு.. அதைத்தான் இந்தப் படத்துல ஒரு சின்ன இண்ட்ரோவுக்காக வைச்சிருக்கேன். மத்தபடி யாரையும் குறிப்பிட்டு கிண்டலடிக்க இல்லை..

அதுலேயும் நரேன் எனக்கு ரொம்ப வருஷ பிரெண்ட்.. ரொம்ப நல்லவன்.. ரொம்ப ஏமாளி.. நாம கொஞ்சம் அழுது கெஞ்சி, செண்டிமெண்டடா பேசி ஏதாவது உதவி கேட்டோம்ன்னா எவ்ளோ கேட்டாலும் கொடு்த்திருவான்.. அவ்ளோ அப்பாவி..” என்றார்.

இவ்ளோ பெரிய அப்பாவிகளெல்லாம் தமிழ்ச் சினிமால இருந்தா அவங்களுக்கே ரொம்ப ஆபத்தாச்சே..?

Our Score