full screen background image

‘சுயம்பு’ படத்தில் சம்யுக்தாவின் போஸ்டர் வெளியானது..!

‘சுயம்பு’ படத்தில் சம்யுக்தாவின் போஸ்டர் வெளியானது..!

நடிகை சம்யுக்தா பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சுயம்பு’ படத்தில் இருந்து கேரக்டர் லுக்கை படக் குழு வெளியிட்டது!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா.

தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா.

தாகூர் மது வழங்கும் இப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவனும் ஸ்ரீகரும் தயாரித்துள்ளனர்.

சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி, தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர், பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ், வழங்குபவர்: தாகூர் மது, இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: கே.கே. செந்தில் குமார், தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம். பிரபாஹரன், இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த், பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர், சந்தைப்படுத்தல்: ஃப்ர்ஸ்ட் ஷோ.

இன்றைக்கு சம்யுக்தாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ‘சுயம்பு’ படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக் குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தப் போஸ்டரில் தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. நிகிலின் 20-வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்கிறார்.

போர் பின்னணியில் உருவாகும் இப்படம், மிகப் பெரிய பட்ஜெட் மற்றும் முதல் தர தொழில் நுட்பத்துடன் உருவாகியுள்ளது.

Our Score