“சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கணும்…” – ‘ஈ’ பட ஹீரோ சுதீப்பின் பாராட்டு..!

“சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கணும்…” – ‘ஈ’ பட ஹீரோ சுதீப்பின் பாராட்டு..!

“நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கியிருக்க வேண்டும்” என்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய பைலட் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி கடந்தாண்டு ஓடிடியில் வெளியாகி… ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம், தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சுதீப் நடிகர் சூர்யாவை வானளாவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அவர் இந்தப் படம் குறித்தும், சூர்யாவின் நடிப்பு குறித்தும் தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “நான் தற்போதுதான் ஓடிடியில் ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சூர்யாவுக்கு இந்தப் படத்திற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர்தான்.

நான் சந்தித்த அரிய மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் போலித்தனம் கிடையாது. அப்படத்தில் அவருடையது பிழையில்லாத நடிப்பு என்று சொல்வேன்.

ஒரு படத்தை பார்ப்பது வேறு. ஆனால் அதை ஒரு கதையாக படிப்பது வேறு. ஒரு கதையை மட்டுமே மனதில் வைத்து அதில் நடிப்பது குறித்து தீர்மானிப்பது மிகவும் கடினம். அது மட்டுமின்றி இது வழக்கமான ஒரு ஹீரோயிசம் கொண்ட படம் கிடையாது. கேரியரின் உச்சத்தில் உள்ள இந்தக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை தேர்வு செய்வதற்கு ஒரு நடிகனுக்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் சூர்யாவிற்கு இருந்துள்ளது…” என பாராட்டித் தள்ளியுள்ளார் நடிகர் சுதீப்.

Our Score