full screen background image

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா-ஜோதிகா ஜோடி..!

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா-ஜோதிகா ஜோடி..!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் சாய் பல்லவி.

நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழுவினர் இந்தப் படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் சாய் பல்லவி “விரைவில் ‘கார்கி’ படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும்.. என்று பகிர்ந்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இந்த ‘கார்கி’ படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர்.

இது குறித்து படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராதபோதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம்தான் சூர்யா, ஜோதிகா நட்சத்திர ஜோடி எங்கள் படத்தில் இணைந்திருப்பது.

சூர்யாவும், ஜோதிகாவும் கார்கி’யை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதைவிட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை. இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி…” என்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Our Score