பாலிவுட்டை கலக்கும் சன்னி லியோனின் இரட்டை அர்த்த வாழைப்ப பழ டயலாக்.!

பாலிவுட்டை கலக்கும் சன்னி லியோனின் இரட்டை அர்த்த வாழைப்ப பழ டயலாக்.!

சன்னி லியோன் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கனடாவைச் சேர்ந்த இந்த போர்னோ பட நாயகி, இந்திய ஆண்களின் ஜொள்ளுவிடும் பழக்கத்தைக் கேள்விப்பட்டு பாலிவுட்டுக்கு வந்து இறங்கிய உடனேயே தனது கலைச் சேவையைத் தொடர்ந்துவிட்டார்.

அடுத்தடுத்து படங்களில் தனது அதிரடி கவர்ச்சிகளாலும், காட்சிகளாலும் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டின் பி கிரேட் மூவி தயாரிப்பாளர்கள் இப்போதும் கையில் பெட்டியுடன் சன்னியைத் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

இவர் கடைசியாக நடித்த ‘ராகினி எம்.எம்.எஸ்.’ படம் ஓரளவுக்கு முதலுக்கு பங்கமில்லாமல் ஓடுவதால் அடுத்தடுத்து படங்களும் கியூவில் நிற்கின்றன. ஆனாலும் தேர்ந்தெடுத்த கதைகளில்தான் நடித்து வருகிறார் சன்னி.

அப்படி சன்னி லியோனின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் mastizaade. இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே நாளில் 5 லட்சம் பேர் பார்த்து பூரித்துப் போயிருக்கிறார்கள். காரணம்.. சன்னியைவிடவும் அவரை வைத்து இயக்குநர் செய்திருக்கும் அற்புதமான கிரியேட்டிவ் ஸ்டோரிதான்..

sunny leon

இத்தூணூன்டு டிரெஸ்ஸை போட்டுக் கொண்டு, கையில் இரண்டு வாழைப்பழங்களை உரித்து வைத்துக் கொண்டு “சம்பல் கே ராகியே ஆப் மே கேலே கியுன்கி ஆ ராகே ஹை லைலா லேலே..” என்ற வசனத்தை பேசுகிறார் சன்னி லியோன். இதற்கு அர்த்தம் “உங்கள் ‘வாழைப் பழங்களை’ பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் லைலா லேலே வருகிறாள்” என்பதுதானாம்.

வழக்கம்போல இந்திய ஜொள்ளர்களால் இந்த வீடியோ டீஸர் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் பெண்ணிய அமைப்புகள் எதிர்க்குரலை எழுப்பிவிட்டன. ஆபாசமான, இரட்டை அர்த்த வசனம் கொண்ட இந்த டீஸரை வாபஸ் பெற வேண்டும். தடை செய்ய வேண்டும் என்று கூறி மும்பையில் குரல் எழுப்பிவிட்டனராம். போஸ்டர் அடித்தே ஒட்டியிருக்கிறார்களாம்.

ம்ஹூம்.. இதெல்லாம் சன்னியின் காதுகளுக்குச் சென்றால்தானே..?

அந்த டீஸர் இதுதான் :

Our Score