‘கபடதாரி’ படத்தில் பூஜா குமாருக்குப் பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்கிறார்..!

‘கபடதாரி’ படத்தில் பூஜா குமாருக்குப் பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்கிறார்..!

நடிகை சுமன் ரங்கநாதன் 1990-களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ் பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். தமிழ்ச் சினிமாவில் நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த ‘மாநகர காவல்’. நடிகர் அர்ஜூனுடன் இணைந்து நடித்த ‘மேட்டுப்பட்டி’ படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஆரம்பம்’ படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இப்போது நடிகர் சிபிராஜின் நடிப்பில் உருவாகிவரும் ‘கபடதாரி’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தக் ‘கபடதாரி’ திரைப்படம் சமீபத்தில் கன்னட சினிமாவை கலக்கிய ‘காவலுதாரி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

kabadathaari-suman-3

Creative Entertainers & Distributors சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.

மேலும் நாசர், ஜெயப்பிரகாஷ், J.சதீஷ் குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சைமன் K.கிங் இசையமைக்கிறார்.  ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K.L. படத் தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ்வின் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் சுமன் ரங்கநாதன் நடித்துள்ளார்.

kabadathaari-suman-1

படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம்மிக்கதாக இவரது கதாப்பாத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பிலும் இவரே இந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து படத்தைத் தயாரிக்கும் Creative Entertainers & Distributors நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன் பேசும்போது, “நடிகை சுமன் ரங்கநாதன் இந்தப் படத்தில் எங்களுடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி.

முன்னதாக நடிகை பூஜா குமாரை இந்தக் கதாப்பாத்திரத்திற்காக நாங்கள் தேர்வு செய்திருந்தோம். அவரும் இக்கதாப்பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவரே. ஆனால் அவரின் அவசரமான, தவிர்க்க முடியாத அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

kabadathaari-suman-2

தற்போது கன்னட பதிப்பில் இந்தக் கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. சுமன் ரங்கநாதன் கன்னடத்தில் தனது வெகு அற்புதமான நடிப்பால் இக்கதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம்.

தமிழில் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்கு பெறும் பகுதியின்  படப்பிடிப்பு  முழுதாக முடிந்துவிட்டது. சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்கு பெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.

இன்னும் 20 நாட்கள் மட்டுமே இ்ந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score