கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

நடிகர் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் பொன்னம்பலம், ராமச்சந்திர ராஜூ மற்றும் பல பெரிய நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய.. விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் துவக்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சினையினால் இப்போதுதான் ஒரு வருடம் கழித்து இன்றைக்குத்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

இது பற்றி நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தியில், “இன்றைக்கு படம் முடிந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுவரையிலும் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தது. என்னுடைய நடிப்பில் உருவாகிய படங்களில் இதுதான் அதிகப் பொருட் செலவைத் தொட்டுள்ளது. படத்தைச் சிறந்த முறையில் வழங்க ஒத்துழைப்பு தந்த படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்..” என்று கூறியுள்ளார்.

Our Score