குழந்தை நடிகர்களுக்கான வரைவு வழிகாட்டுதலை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், குழந்தைகளை நடிக்க வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் படத் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்பு தளத்தை ஆட்சியர் ஆய்வு செய்த பிறகே அனுமதி கடிதம் வழங்குவார் என்றும், ஆறு மாத காலத்திற்கு மட்டுமே அந்த கடிதம் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மூன்று மாத வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது எனவும், கேலிக்கு ஆளாகும் பாத்திரத்தில் குழந்தைகள் நடிக்காமல் இருப்பதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 மணி நேரத்திற்கு மேல் குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது எனவும், 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு இடைவேளைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 7 மணி முதல் காலை 8 மணிவரை குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது எனவும், மது அருந்துதல், புகைப்பிடித்தல் தொடர்பான காட்சிகளில் குழந்தைகளை காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.