மாதத்திற்கு 2 படங்களை விநியோகம் செய்து வரும் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மேலும் 2 முக்கிய திரைப்படங்களை விநியோகம் செய்யவுள்ளது.
‘ஒரு நாள் கூத்து’ மற்றும் ‘புரூஸ்லீ’ ஆகிய படங்களே இப்போது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கைக்கு வந்துள்ள படங்களாகும்.
‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கென்ன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ‘ஐ டியூனில்’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
படம் தயாராகி வெளியாகும் நிலையில் இந்தப் படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியிருப்பது படத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமையாகவும், விளம்பரமாகவும் கருதப்படுகிறது. மிக விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘புரூஸ்லீ’ படத்தையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸே விநியோகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.