full screen background image

ஆந்திர திரையுலகத்தை அலற வைத்திருக்கும் ‘ஸ்ரீலீக்ஸ்’

ஆந்திர திரையுலகத்தை அலற வைத்திருக்கும் ‘ஸ்ரீலீக்ஸ்’

காவிரி நீர் பிரச்சினைக்காக தமிழ் மற்றும் கன்னட திரையுலகங்கள் பரபரப்பாக இருந்து வரும், இதே நேரத்தில் தெலுங்கு திரையுலகம் வேறு ஒரு விவகாரத்தினால் பதறிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீரெட்டி என்னும் தெலுங்கு நடிகை சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதற்காக தன்னை பலரும் படுக்கைக்கு அழைத்ததாகவும், சிலர் தன்னை பயன்படுத்திக் கொண்ட பின்பும் வாய்ப்புக் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் பகீர் குற்றச்சாட்டை பகிரங்கமாகவே வைத்திருப்பதுதான் தெலுங்கு சினிமாவை தற்போது ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

sri reddy-leaks-16

கடந்த ஒரு மாத காலமாகவே இந்த ஸ்ரீரெட்டி, “தெலுங்கு சினிமாவில் தெலுங்கு பெண்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. கிடைப்பதில்லை. வட இந்திய பெண்களுக்கு மட்டுமே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்பளிக்கிறார்கள். காரணம் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் இணங்கிப் போவதுதான் காரணம்…” என்று பேட்டியளித்து வந்தார்.

தெலுங்குலகின் அனைத்து டிவி சேனல்களுக்கும் பேட்டியளித்த ஸ்ரீரெட்டி இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல பல நடிகைகள் இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.

பிரபல நடிகையான ராகுல் ப்ரீத் சிங் ஸ்ரீரெட்டியின் இந்தக் கருத்தை மறுத்து தன்னிடம் யாரும் இதுவரையிலும் இது போல் நடந்து கொண்டதி்ல்லை. திறமையிருந்தால் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்று பதிலளித்தார்.

sri reddy-leaks-14

இதனால் கோபமான ஸ்ரீரெட்டி, “ராகுல் ப்ரீத் சிங் பொய் சொல்கிறார். சில தெலுங்கு படவுலகின் பிரமுகர்களை காப்பாற்ற வேண்டியே இப்படி சொல்கிறார். ராகுல் ப்ரீத் சிங் இனிமேலும் இது மாதிரியான பொய்களை சொன்னால் அவரைத் தேடிப் போய் செருப்பால் அடிப்பேன்..” என்று கொதித்துப் போய் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் சொல்வது உண்மை என்று நிரூப்பிப்பதற்காக ‘ஸ்ரீலீக்ஸ்’ என்கிற பெயரில் தன்னிடமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடப் போவதாக சொன்ன ஸ்ரீரெட்டி, இதற்கு அச்சாரமாக ஒரேயொரு புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் தெலுங்குலகின் மூத்த தயாரிப்பாளரின் மகன் எனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி என்னைப் பயன்படுத்திக் கொண்டு பின்பு ஏமாற்றிவிட்டதாக பரபரப்பாக்கினார் ஸ்ரீரெட்டி.

sri reddy-leaks-1

அந்த தயாரிப்பாளரின் மகன் யார் என்பது அரசல் புரசலாக தெலுங்கு மீடியாக்களில் தெரிந்தாலும், அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்தார் ஸ்ரீரெட்டி.

இதற்கிடையில் தனக்கு தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துத் தர மறுக்கிறார்கள் என்று சொல்லி தெலுங்கு பிலிம் சேம்பர் வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுமைக்குமான மீடியாவை கவர்ந்திழுத்தார் ஸ்ரீரெட்டி.

இவருடைய பேட்டிகள் மற்றும் பேச்சுக்களால் கோபமடைந்த தெலுங்கு திரையுலகத்தினரும் ஸ்ரீரெட்டியை திரையுலகத்தில் இருந்து வெளியேற்றும்படி தெலுங்கு நடிகர் சங்கத்தை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

sri reddy-leaks-15

அன்றைக்கே அவசரம், அவசரமாக கூட்டப்பட்ட தெலுங்கு நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் ஸ்ரீரெட்டியின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவருடைய மோசமான நடத்தையையும், அவருடைய பேச்சுக்களையும் கவனத்தில் கொண்டும் அவருக்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அந்தஸ்து தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

அன்றைக்கே போலீஸ் விசாரணைக்கு போய்விட்டு வீடு திரும்பியவரிடம் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி சொல்லிவிட.. இன்னமும் கோபத்தின் உச்சத்துக்கே போயிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

அன்றைய இரவில் இருந்தே தன்னிடம் ‘ஜொள்ளு’ விட்டு பேசிய தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய கதாசிரியர் மற்றும் இயக்குநர் ஒருவரின் வாட்ஸ்அப் சாட்டிங்கை வெளியிட்டார். கூடவே மற்றுமொரு மூத்த இயக்குநரின் ‘ஜொள்ளு’ சாட்டிங்கையும் வெளியிட்டு நடு இரவிலும் தெலுங்கு சினிமாவுலகத்தை கதகதக்க வைத்திருக்கிறார்.

sri reddy-leaks-8 sri reddy-leaks-9

இந்த மூத்த இயக்குநர் இயக்கியிருக்கும் திரைப்படம் விரைவில் வெளிவரப் போகிறதாம். ஏற்கெனவே “இயக்குநர் சேகர் கம்முலு தான் இயக்கும் படங்களில் நடிக்க விரும்பும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்…” என்று ஸ்ரீரெட்டி சொல்லியிருந்தார். இதற்காக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடவிருப்பதாக சேகர் கம்முலு ஆவேசமாக பேட்டியளித்திருக்கிறார்.

இப்படியே போன கதையில் அடுத்த டிவிஸ்ட்டாக தன்னை ஏமாற்றிய தயாரிப்பாளரின் மகன் தெலுங்கு சினிமாவின் அடையாளமாகவே திகழ்ந்த டி.ராமாநாயுவின் பேரனும், தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணா டக்குபதியின் தம்பியுமான அபிராம் டக்குபதிதான் என்று வெளிப்படையாகச் சொல்லி டிவிட்டரில் பதிவிட்டார் ஸ்ரீரெட்டி.

sri reddy-leaks-10 sri reddy-leaks-11 sri reddy-leaks-5 sri reddy-leaks- sri reddy-leaks-4 sri reddy-leaks-3 sri reddy-leaks-2

கூடவே தானும் அபிராம் டக்குபதியும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களையும் வெளியிட பற்றிக் கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகம்.

முதல் புகைப்படத்தை வெளியிட்டபோதே பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்ள அபிராம் தரப்பில் பலவாறு பேச்சுவார்த்தை நடத்தியும் ஸ்ரீரெட்டி மசியவில்லையாம்.

இது குறித்து ஸ்ரீரெட்டி சொல்லும்போது, “அபிராம் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொல்லி தன்னுடன் நட்புடன் பழகியதாகவும், ஆனால் கடைசியில் எந்தப் படத்தில் நடிக்க வைக்கவில்லை..” என்றும் சொல்லியிருக்கிறார்.

அபிராம் இப்போதுதான் இயக்குநர் தேஜாவிடம் சொல்லி ஸ்ரீரெட்டியை அவருடைய அடுத்தப் படத்தில் நடிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனாலும் ஸ்ரீரெட்டியின் கோபம் தணியவில்லை.

sri reddy-leaks-13

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசுகையில், “இப்போதெல்லாம் அனைத்து தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களெல்லாம் பெண்களை படுக்கைக்கு அழைப்பது தெலுங்கு ஸ்டூடியோக்களில்தான். ஏனெனில் அங்குதான் போலீஸ் ரெய்டு பிரச்சினையே வராது என்பதால்தால்தான்.

எனக்கும் அபிராமுக்குமான நட்பு அங்குதான் தொடங்கியது. ஒரு திரைப்படம் தொடர்பாக பேச வேண்டும் என்று அவருடைய ஸ்டூடியோவுக்கு அழைத்தார் அபிராம். அதை நம்பித்தான் நான் அங்கு சென்றேன்.

ஆனால் அங்கே தனிமையில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வலுக்கட்டாயமாக என்னை பலவந்தப்படுத்தி என்னுடன் உறவு கொண்டார். இதன் பின்பு எனக்கு எப்படியும் ஏதாவது ஒரு படத்திலாவது ஹீரோயின் வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொன்னார் அபிராம்.

இதை நம்பி அவருடன் சில காலம் நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் எல்லாம் விளையாட்டுக்குத்தான் என்று சொல்லிவிட்டு விலகிவிட்டார்..” என்று குற்றம்சாட்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

இதற்கிடையில் தினமும் ஒரு தொலைக்காட்சியில் தனது தரப்பு வாதத்தை அழுத்தம் திருத்தமாக வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டியை பார்த்து வெளிநாடுவாழ் ஆந்திர மணவாடுகளும் பயந்து போயிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் சென்ற சில ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆந்திர சபா விழாக்களில் ஸ்ரீரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த விழாக்களில் நடனம் ஆடிய ஸ்ரீரெட்டி ஓய்வு நேரங்களில் அங்கேயுள்ள பெரும் பணக்கார ஆந்திரக்காரர்களுடன் ‘நட்புடன் பழகி’னாராம். இந்தியா வந்த பிறகும் அவர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங்கும் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

இப்போது அந்த சாட்டிங்குகளும், வீடியோக்களும் வெளியில் வந்துவிடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள் வெளிநாடு வாழ் ஆந்திர கனவான்கள்..!

இப்போது, அடுத்த ஸ்ரீலீக்ஸில் சிக்கப் போகும் பிரபலம் யார் என்பதுதான் டாலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்பு..!

Our Score