மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் ‘சவுகார்பேட்டை’.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய்லட்சுமி நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி,
இசை – ஜான்பீட்டர்
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ்
நடனம் – தினேஷ்
ஸ்டண்ட் – கனல்கண்ணன்
எடிட்டிங் – எலிசா
வசனம் – ஷாம்மேனன்
கதை, திரைக்கதை இயக்கம் – வடிவுடையான்.
தயாரிப்பு – ஜான்மேக்ஸ்
படத்தை பற்றி பேசிய இயக்குநர் வடிவுடையான், “இந்த சவுகார்பேட்டை’ படம் இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக மூலகொத்தளம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் ஐம்பது பேய்களுடன் அதிரடியாக மோதும் படு பயங்கர சண்டைக் காட்சி படமாகவுள்ளது. எட்டு காமிராக்கள் கொண்டு பத்து நாட்கள் இந்த சண்டைக் காட்சியை கணல் கண்ணன் படமாக்குகிறார். அதிரடியான பேய் படமாக சவுகார்பேட்டை உருவாகிக் கொண்டிருக்கிறது..” என்றார்.









