20 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் ‘நான்தான் பாலா’ படம் முலமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம், இப்பொழுது எதார்த்த வாழ்வியலை ‘சூது வாது’ படத்தின் மூலம் நமக்கு அளிக்கவிருக்கிறார்.
சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடித்த சுனு லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ‘நண்டு’ ஜெகன் நடித்திருக்கிறார். மேலும் கோவை சரளா, செண்ட்ராயன், டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரூபா ஸ்ரீநாயர், ஜெரால்டு, என்.இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நகைச்சுவைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம்.
தொழில் நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, இயக்கம் – கண்ணன் ராஜமாணிக்கம்
வசனம் – ‘ஆச்சார்யா’ ரவி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை
கலை – வைரபாலன்
இசை – சந்திரஜித்
பாடல்கள் – தனிக்கொடி
படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா
இணை இயக்குநர் – பாரி
இணை தயாரிப்பாளர் – என் இளங்கோ
சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ்
நடனம் – கிஷோர்
மக்கள் தொடர்பு – நிகில்
அம்பாசமுத்திரம், குற்றாலம், திருநெல்வேலி, சுந்தரபாண்டிபுரம், குற்றாலம் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள கும்பா உருட்டி அருவியும், அம்பாசமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையமும் படம் முழுவதும் வருவதால் இந்த இரு இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.