full screen background image

தாய்லாந்தில் படமாகியிருக்கும் ‘சூது வாது’

தாய்லாந்தில் படமாகியிருக்கும் ‘சூது வாது’

சிவம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.மணி தயாரித்துள்ள படம் ‘சூது வாது’. இதில் ராகுல் மாதவ், உன்னி முகுந்தன், மற்றும் ரிச்சா பனாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹீரோவான உன்னி முகுந்தன், ‘சீடன்’ & ‘திகார்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜூனியர்  NTR-ன் ‘ஜனதா கேரேஜ்’ திரைப்படத்தில் அவருக்கு இணையான கதாபாத்திரத்திலும், அனுஷ்காவுடன் வேறொரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’  படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ‘100 days of love’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியான ரிச்சா பனாய் ‘வாடாமல்லி’ (மலையாளம்) என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான விருதை பெற்றுள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகன்  அல்லரி நரேஷுடனும், கன்னடத்தில்   முன்னணி கதாநாயகனான ஸ்டார் கணேஷுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த  ஹிந்தி திரைப்படமான ‘ட்ராபிக்’கிலும் இவர்தான் கதாநாயகி என்பது குறிப்பிட்டத்தக்கது.

இசை : ஓசு பச்சன், ஒளிப்பதிவு : மோகன், கதை: ராஜேஷ்  ஜெயராமன், பாடல்கள் : நியூட்டன், படத் தொகுப்பாளர் : ரஞ்சித், சண்டை பயிற்சி : மாபியா சசி, நடனம் : அசோக் ராஜா, தயாரிப்பு மேற்பார்வை : ஈஸ்வர் பாபு. மக்கள் தொடர்பு – ராஜ்குமார், எழுத்து, இயக்கம் – பிரமோத் பப்பன்.

உன்னி முகுந்தன், மாதவன் என்ற கதாபாத்திரத்திலும், ராகுல் மாதவ், ஸ்ரீஹரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஸ்ரீஹரி அவரது அண்ணனை(மாதவன்) தேடி பாங்காக் செல்கிறார். அங்கு ஸ்ரீஹரி மாதவனை சந்திக்கும்பொழுது ஏற்படும் நிகழ்வுகளையும், அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதையும், இதில் காதல், துரோகம், சூது மற்றும் பணத்திற்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது.

‘சூது வாது’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீடு விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

Our Score