‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நலன் குமாரசாமி தனது இரண்டாவது படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.
தற்போது அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘கை நீளம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இது ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமாம்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத் தொகுப்பை கவனித்து கொள்கிறார்.
அபி & அபி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று அன்று துவங்கவுள்ளது.
‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் விஜய் சேதுபதி இருந்தாலும், கருணாதான் ஹீரோ போல கிளைமாக்ஸில் நின்றார்.. இப்போது கருணாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதாலும், ரசிகர்கள் அவரை ரசிப்பதாலும் உடனேயே சூட்டோடு சூட்டாக கருணாவை மையமாக்கி படமெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். வசதியாக வந்து மாட்டிவிட்டது ‘சூது கவ்வும்’ படம்.. உடனேயே துவக்கிவிட்டார்களாம்..!
படத்தின் தலைப்பு ‘கை நீளம்’. சாலப் பொருத்தம்தான்..!