full screen background image

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஏ.எல்.ராஜா தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம்  “சூரியனும் சூரியகாந்தியும்”.

இந்தப் படத்தில் காது கேளாத இளைஞரான ஶ்ரீஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தானபாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுத்து, இயக்கம், தயாரிப்பு – ஏ.எல்.ராஜா, ஒளிப்பதிவு – திருவாரூர் ராஜா, இசை – ஆர்.எஸ்.ரவி பிரியன், படத்தொகுப்பு – வீரசெந்தில்ராஜ், நடன இயக்கம் – மஸ்தான், பாடல்கள் – ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர்வாணன், சண்டைப் பயிற்சி  இயக்கம் – ஸ்பீடு மோகன், கலை இயக்கம் – ஜெயசீலன், பத்திரிக்கை தொடர்பு – கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு – டெய்லி குருஜி.

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” என்ற பாரதியாரின் பாடல்தான் கதையின் மையக் கருத்து.

சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூ போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதும்தான் இந்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை.

இந்தப் படத்தின் இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட நடிகர் மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்!

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 

Our Score