ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தொழில் நகரமான ஒசாகா நகரில் வருடந்தோறும் நடைபெறும் தமிழ் தேசிய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன.
கொரோனா காரணமாக 2 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த ‘ஒசாகா தமிழ் தேசிய திரைப்பட விழா’ இந்த வருடம் நடைபெற்றுள்ளது.
இந்த திரைப்பட விழாவில் 2020-ம் வருடத்திற்கான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுப் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த இயக்குநர் – சுதா
சிறந்த தயாரிப்பு நிறுவனம் – 2-டி நிறுவனம்
சிறந்த கலை இயக்குநர் – ஜாக்கி
சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்குமார்
என்று முக்கிய விருதுகளை இந்தப் படமே கைப்பற்றியுள்ளது.
மேலும்,
சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (க.பெ.ரணசிங்கம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – ஷா ரா (ஓ மை கடவுளே)
சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.எம்.பாஸ்கரன் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர் – தேசிங்கு பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த நடன இயக்குநர் – எம்.ஷெரீப் (சிரிக்கலாம், பறக்கலாம் – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த துணை நடிகர் – காளிதாஸ் ஜெயராம் (பாவக்கதைகள்)
சிறந்த துணை நடிகை – வாணி போஜன் (ஓ மை கடவுளே)
சிறந்த வில்லன் – பிரசன்னா (மாபியா-1)
சிறந்த படத் தொகுப்பாளர் – பூபதி செல்வராஜ் (ஓ மை கடவுளே)
சிறந்த சண்டை பயிற்சி இயக்குநர் – பீட்டர் ஹெயின்-ராம் லஷ்மண் – தர்பார்
சிறந்த கிராபிக்ஸ் – அக்ஸா ஸ்டூடியோஸ் – ஓ மை கடவுளே
சிறந்த ஒலிப்பதிவாளர் – எஸ்.அழகியகூத்தன் – அந்தகாரம்
சிறந்த விமர்சனங்களைப் பெற்ற படம் – செத்தும் ஆயிரம் பொன்









