full screen background image

மனித உரிமை சட்டம் பற்றிப் பேச வரும் ‘சூமோட்டா’ திரைப்படம்

மனித உரிமை சட்டம் பற்றிப் பேச வரும் ‘சூமோட்டா’ திரைப்படம்

லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் A.J.முகமது மன்னார் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘சூமோட்டா.’

இந்தப் படத்தில் கதாநாயகனாக ‘நிசப்தம்’ படப் புகழ் அஜய் ஸ்ரீதரும் கதாநாயகிகளாக பனிமலர் பன்னீர்செல்வமும், அம்சரேகாவும் நடித்துள்ளனர். வில்லனாக இயக்குநர் லியாகத் அலிகான் நடித்துள்ளார். மேலும் நெல்லை ப.கோ.சிவகுமார், ‘கால் டாக்ஸி’ படப் புகழ் நிமல், ‘ஒயிலாட்டம்’ ஷர்மிளி, கந்தசாமி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இளையராஜா வேலுசாமி, இசை – வாரென் சார்லி, படத் தொகுப்பு – முத்து கோடீஸ்வரன், பாடல்கள் – சொற்கோ, வே.மதன்குமார், மதுரா மற்றும் புகழேந்தி.

இராமசாமி.P. ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

இந்த ‘சூமோட்டா’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியன் அவர்கள் இன்று வெளியிட்டார். 

கோவிட்-19 முதல் அலையின்போது அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காக மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு தானாக வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க வழி செய்வதே இத்திரைப்படத்தின் கதை.

இந்தியாவில் முதன்முதலில் எடுக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் பற்றிய முழு நீளத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது,

இப்படம் உலக மனித உரிமை ஆணையத்தின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது என்பது மேலும் சிறப்பானது.

Our Score