full screen background image

தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஜதி ரத்னதாலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய  கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழ்,தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது SK 20’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை Suresh Productions சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும், நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம்  மோகன் ராவ்  SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும்  Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமன் இசையமைக்கிறார், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் தமன் இணைவது இதுவே முதல் முறை.

முழுக்க, முழுக்க  சிறந்ததொரு நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் ஆகிய இருவருமே  தங்கள் திரைப்படங்களில், அவர்கள் வெளிப்படுத்தும், 100% அதிரடியான காமெடி அம்சங்களுக்காக,  ரசிகர்களிடம்  பிரபலமானவர்கள்.

இவர்களின் அட்டகாசமான காமெடி திறமை, இப்படத்தை ஒரு  நகைச்சுவை திருவிழாவாக மாற்றும். இப்படத்தின் கதை  முழுதும் பாண்டிச்சேரியை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் அனுதீப் கூறும்போது, “திரைத்துறையில்  உள்ள பெரிய நட்சத்திர  குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில்  மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர்  சிவகார்த்திகேயனை நடிகராக அல்லாமல் ஒரு மேஜிஷியனாகவேதான் நான் பார்க்கிறேன்.

திரையில் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாக குழந்தைகள் முதல் குடும்பங்களில் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரது திறமை, தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்று தந்துள்ளது. இந்த படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

இசையமைப்பாளர் தமனின் மாயாஜால இசை அனைத்து திரைப்படங்களுக்குமே ஒரு வலுவான தூணாக அமைந்து வருவது குறிப்பிடதக்கது, அவர் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவதில் நான்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

SK 20 படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளது.

Our Score