ஸ்ரீமுத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சிவப்பு மனிதர்கள்’.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சங்கர், சோனா, கஞ்சா கருப்பு, ரேஷ்மா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பெஞ்சமின், பாரதி கண்ணன், வேல்முருகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் லிவிங்ஸ்டன், வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதையின் நாயகி மீனாட்சி சங்கரின் சகோதரனாக சமூக நீதி போராளியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அன்பு சரவணன்.
ஒளிப்பதிவு – தங்கப்பாண்டியன், கலை இயக்கம் – பத்மநாபா கதிர், இசை – விஜய் மந்தாரா, பாடல்கள் – கவிஞர் விவேகா, அறிமுக கவிஞர் ஏ. மு.ராதா, இயக்குனர் அன்பு சரவணன், படத் தொகுப்பு – ராஜ் கீர்த்தி, நடனம் – ரவிதேவ், பவர் சிவா, சண்டை பயிற்சி – தீப்பொறி வித்யா, ஸ்டண்ட் ஜாகிர், தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக் ரெட்டி, தயாரிப்பு – சரவணன் பாலு.
குடும்பம், காதல், மோதல் சமூக பார்வையோடு தயாராகி இருக்கும் இந்த ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தை, வரும் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.









