Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமாரின் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான இந்த ‘சைரன்’ படம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் ‘சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
மிகப் பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த ‘சைரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது.
ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி, பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது.
இதுவரையிலான ஜெயம் ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் இந்த ‘சைரன்’ படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படம் உலகமெங்கும் வரும் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.









